Tuesday 30th of April 2024 03:58:30 PM GMT

LANGUAGE - TAMIL
.
கனடா – ஒன்ராறியோவில் கடந்த ஆண்டு 355,000-க்கும் மேற்பட்டோர் வேலை இழப்பு!

கனடா – ஒன்ராறியோவில் கடந்த ஆண்டு 355,000-க்கும் மேற்பட்டோர் வேலை இழப்பு!


கனடா - ஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா தொற்று நோயால் ஏற்பட்ட நெருக்கடிகளின் மத்தியில் கடந்த ஆண்டு சுமார் 355,000 க்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளதாக மாகாண அரச நிதி வரவு கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

வேலை இழந்தவர்களுக்கு மேலதிகமாக ஒன்ராறியோவில் வசிக்கும் 765,000 -க்கும் மேற்பட்டவர்கள் தொற்றுநோயால் குறைவான மணிநேரம் வேலை செய்ததாக கண்காணிப்புக் குழு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள் மத்தியில் வேலையிழப்பு வீதம் 22 வீதமாக உயர்ந்ததால் இளம் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தங்குமிடம் மற்றும் உணவக தொழில் துறையில் மட்டும் சுமார் 110,000-க்கும் மேற்பட்டவர்கள் வேலை இழந்துள்ளதால் இத்தொழில்துறையினர் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரச நிதி வரவு கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா, ஒன்ராறியோ



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE